எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்.மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்.
இப்போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஏற்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், ஒரே நாளில் அதிகபட்ச நபர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்தமைக்காக World Records Union மற்றும் Asia Book of Records ஆகிய அமைப்புகள் முதல்வரிடம் அதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமலாக்கப் பணியகம், குற்றப்புலனாய்வு துறையை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த புதிய பிரிவு உருவாக்கப்பட்டதன் மூலம் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை அடைய பெரும் உதவிகரமாக இருக்கும்.
போதை ஒழிப்பு தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, தன்னார்வலர்கள் அமலாக்கப் பணியகம், குற்றப்புலனாய்வு துறை இணையதளம் வாயிலாக பங்கேற்கும் 30 மணிநேர விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்மூலம், தன்னார்வலர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இணையதளம் வழியாகவும் மற்றும் நேரடியாகவும் தொடர்ந்து 30 மணிநேரம் மேற்கொள்வார்கள்.
பின்னர், அமலாக்கப் பணியகம், குற்றப்புலனாய்வு துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார குறும்படத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் இவ்விழிப்புணர்வு குறும்படம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்காக திரையிடப்பட்டது.
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து உரையாற்றி, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் காத்திகேயன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (குற்றம்) மகேஷ்குமார் அகர்வால், காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் எத்தனை இடம்
23 Dec 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் வருமாறு.
-
எட்டு மாவட்டங்களுக்கு புதிய த.வெ.க. நிர்வாகிகளை நியமனம் செய்தார் விஜய்
23 Dec 2025சென்னை, த.வெ.க.வில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் விஜய் தெரிவித்தார்.
-
நன்னிலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
23 Dec 2025சென்னை, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன்’ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Dec 2025சென்னை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.
-
இலங்கை கடற்பைடையால் கைதாகும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Dec 2025சென்னை, இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்த
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்
23 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 75 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் வருகிற டிச.
-
6500 கி. எடையுள்ள ’புளு பேர்ட்-6' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்
23 Dec 2025பெங்களூரு, 6500 கி. எடையுள்ள அமெரிக்காவின் ’புளுபேர்ட்-6′ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்.
-
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Dec 2025சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க.
-
விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் கோலி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு
23 Dec 2025பெங்களூரு, விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் கோலி ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
23 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமருடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
23 Dec 2025புதுடெல்லி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினார்.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு:பியூஷ் கோயலிடம் பட்டியலை கொடுத்த எடப்பாடி பழனிசாமி: பொங்கல் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகிறது
23 Dec 2025சென்னை, தொகுதி பங்கீடு குறித்து பியூஷ் கோயலிடம் பட்டியல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி பொங்கல் முடிந்ததும் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்.
-
முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் தீப்தி சர்மா முதலிடம்
23 Dec 2025துபாய், ஐ.சி.சி.யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
-
சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இ.பி.எஸ். - பியூஷ் கோயல் ஆலோசனை
23 Dec 2025சென்னை, தமிழக சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - தமிழக பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025 -
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் : ரயில்கள் விவரம் வெளியீடு
24 Dec 2025சென்னை, வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கதத்தில் நின்று செல்லும் ரயில்களின் விவரங்ளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
நாகையில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மனைவி கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்..!
24 Dec 2025நாகை, நாகையில் மதுபோதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.


