முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      தமிழகம்
stalin---------2022-08-18

Source: provided

சென்னை: தமிழக்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெல்லை கண்ணன், முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர்,கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நட்பாய் இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர். 1992 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2001-ம் ஆண்டுக்குப் பிறகு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரால் அ.தி.மு.கவில் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. ஓர் ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். அரசியலில் மிகப் பெரிய பதவிக்கு அவரால் வர முடியவில்லை.

தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்த அவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். 75 வயதை கடந்த நிலையிலும் பேச்சாற்றலும் நினைவாற்றலும் இவரது பேச்சு இலக்கிய நயமும் சிறப்பாக இருந்தது. அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், இலக்கிய மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நெல்லைக்கண்ணன் மறைவு குறித்து பேசிய அவரது மனைவி, தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், நெல்லை கண்ணன் எழுதிய அனைத்து புத்தகங்களையும் நாட்டுடமையாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தநிலையில் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல பேச்சாளரும் தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களுடன் பழகியவருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவால் வருத்தம் அடைந்தேன். நெல்லை கண்ணனின் தமிழ்ப்பங்களிப்பை போற்றும் வகையில் கடந்த ஆண்டு அரசு சார்பில் இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது.விசிக சார்பில் கடந்த ஆண்டு வழங்கிய காமராஜர் கதிர் விருது பெற்றபோது மேடையில் அன்பு பாராட்டினார் நெல்லை கண்ணன். நெல்லை கண்ணை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், தமிழுலகினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து