முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் டிராமா

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2022      சினிமா
Drama 2022 09 18

Source: provided

சசிகலா புரொடக்ஷ்ன் நிறுவனம் சார்பில் வெளியாகும் முதல் திரைப்படம்  டிராமா. ஜெய்பாலா, கிஷோர், சார்லி, நகுலன் வின்சென்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்  இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் என்று சொல்லப்படுகிறது. 180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் செய்து அதன் பின்னர் ஒரே நாளில்,  ஒரே ஷாட்டில் 2 மணி நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தின் இயக்குனர் அஜூ இதுபற்றி கூறுகையில், பரபரப்பான போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்தது யார் என்று துப்பறிவே இப்படத்தின் கதை என்றார். இப்படத்தில் கிஷோர், சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தந்து நடித்ததே இந்த படத்தின் முதல் வெற்றி என்றார். நாங்கள் நினைத்ததைவிட படம் பிரமாதமாக வந்திருக்கிறது. ஒரே  ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல, அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவுனரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அற்பணிப்பாலும் இந்த முயற்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத்தரும் என்றார். டிராமா திரைப்படத்தினைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களை சசிகலா புரொடக்ஷ்ன் நிறுவனம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து