முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டூடி திரை விமர்சனம்

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2022      சினிமா
Doody-Screen-Review 2022 09

Source: provided

கார்த்திக் மதுசூதன், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவரவி நடிப்பில் உருவான படம் டூடி. கனெக்டிங் டாட்ஸ் புரொடக்ஷ்ன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை, ஆர்.டி.எக்ஸ் இயக்கியுள்ளார். கதை, பெங்களூர் பப்புகளில் இசை கலைஞராக வலம் வருபவர் 33 வயது நாயகன் கார்த்திக். காதல் மீதும், கல்யாணம் மீதும் நம்பிக்கை இல்லாத இவர், ஒரு நாள் ஸ்ரீதாவை என்ற பெண்ணை சந்திக்கிறார். பின்னர் கார்த்திக் மீது ஸ்ரீதா காதல்வசப்படுகிறார். ஆனால் அந்தக் காதலை ஏற்றுக் கொண்ட சில மணித்துளிகளில் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் ஸ்ரீதா. அது என்ன? அதன் பின் என்ன நடந்தது ? இருவரும் இணைந்தார்களா? என்பது தான் மீதிக்கதை. வாழ்க்கையின் மேல் ஒரு பற்றும் இல்லாமல், தன் ஆசைப்படி வாழ்ந்து வரும் பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் கார்த்திக். பலவித எமோஷன்களை கொண்ட ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் ஓகே ரகம். கே.சி.பலசாரங்கன் இசை அருமை. மொத்தத்தில் டூடி  யதார்த்தமான ஒரு காதல் படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து