முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் இயங்கி வரும் நடிகர் சூரி உணவகத்தில் வணிக வரித்துறையினர் திடீர் சோதனை

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2022      சினிமா
Suri 2022-09-21

Source: provided

மதுரை : பிரபல நகைச்சுவை நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக ‘அம்மன்’ என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தின் பல்வேறு கிளைகள் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது என்றாலும், நடிகர் சூரியின் உணவகம் என்பதால் எப்போதும் கூட்டமாகவே காணப்படும்.

இந்த நிலையில், அம்மன் உணவகத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், மாவு உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் மொத்தமாக ஆவணமின்றி வாங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, உணவகத்தின் தலைமையிடமான தெப்பக்குளம் கிளையில் 5 பேர் கொண்ட வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், உணவகத்தின் நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து