முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டப்பேரவையில் 14 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2022      இந்தியா
Gujarat 2022-09-21

Source: provided

காந்திநகர் : குஜராத் சட்டப்பேரவையில் அத்துமீறி நடந்துகொண்ட சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் நாள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், எதிர்க்கட்சித் தலைவர் சுக்ராம் ரத்வா, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தொடர்பான பிரச்னைகள் குறித்து அரை மணி நேரம் சிறப்பு விவாதம் நடத்தவேண்டும் என்று கோரினார். 

சாபநாயகர் நிமாபென் ஆச்சார்யா, ரத்வாவின் கோரிக்கையை நிராகரித்ததால், மேவானி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவையில் சபாநாயகர் அருகே வந்து முழக்கங்களை எழுப்பினர். ஊழியர்களுக்கு நீதி வழங்குங்கள், வன ஊழியர்களுக்கும், முன்னாள் படை வீரர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். 

அனைத்து துறைகளிலும் உள்ள பல ஊழியர்கள், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்காகப் போராடும்போது, பேரவையில் விவாதம் நடத்த பாஜக ஏன் தயாராக இல்லை? என்று காங்கிரஸ் தொடர் முழக்கங்களை எழுப்பினர். 

சாபநாயகர் உத்தரவுப்படி எதிர்க்கட்சி எல்எம்ஏக்கள் தங்கள் இருக்கைகளுக்குச் செல்ல மறுத்ததால், குஜராத் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி இருக்கையில் அமர மறுத்த எம்எல்ஏக்கள் 14 பேரை நாள் முழுவதும் இடைநீக்கம் செய்தார். பின்னர் அவர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து