முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க முன்னள் அதிபர் டிரம்ப் - அவரது வாரிசுகள் மீது புதிதாக மோசடி வழக்கு தாக்கல்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      உலகம்
Trump 2022 09 22

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் தெரிவித்துள்ளதாவது:-

டிரம்ப், தனது குழந்தைகளான இவான்கா, டான் ஜூனியர், எரிக் மற்றும் டிரம்ப் அமைப்பில் உள்ள நிர்வாகிகளின் உதவியுடன், தொடர்ந்து கடன் ஒப்பந்தங்களை திருப்திப்படுத்த டிரம்பின் சொத்து நிகர மதிப்பை பொய்யாக உயர்த்தினார். 2011 மற்றும் 2021-க்கு இடையில், டிரம்ப் மற்றும் டிரம்ப்பின் அமைப்பு 200-க்கும் மேற்பட்ட தவறான மதிப்பீடுகளை அவரது சொத்துக்களுக்கு தெரிந்தே உருவாக்கியது. அவர்கள் கடன் வழங்குபவர்களை தவறாக வழிநடத்தி அதிக சாதகமான கடன்களைப் பெற முயற்சித்தனர், மேலும் குறைந்த பிரீமியத்தில் அதிக வரம்புகளுக்கு காப்பீட்டுத் தொகையைப் பெற முயற்சித்தனர், வரிச் சலுகைகளைப் பெற முயற்சித்தனர் என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது. ஏற்கனவே டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய வழக்கு டிரம்ப் மற்றும் குடும்பத்துக்கு புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து