முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் பொருளாதார நெருக்கடி: லெபனானில் வங்கிகள் காலவரையின்றி மூடல்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      உலகம்
Bank 2022--09-23

Source: provided

பெய்ரூட் : கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனானில் வங்கிகள் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்காசிய நாடான லெபனான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாங்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.

லெபனான் பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, பணவீக்கம் உயர்ந்ததையடுத்து 2019-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருந்து டாலர்களை திரும்பப்பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் முடக்கப்பட்ட சேமிப்புகளை மீண்டும் எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வந்தது. ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது.

இதுபற்றி லெபனான் வங்கிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரையில் அங்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து