முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: காங்., தலைவர் தேர்தலில் அசோக் கெலாட்போட்டி : ராகுல் காந்தி போட்டியில்லை என தகவல்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      இந்தியா
Ashok-Khelat 2022--09-23

Source: provided

புதுடெல்லி : ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்லில் போட்டியிடப் போவதை உறுதி செய்துள்ளார். மேலும், தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்ட அசோக் கெலாட் அங்கு ராகுல் காந்தியைச் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது., காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியினை முடிவு செய்து தெரிவிப்பேன். நாடு தற்போது இருக்கும் நிலையில் எதிர்க்கட்சியை பலப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

கட்சியினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தலைவர் பதவிக்கு மீண்டும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று பல முறை வலியுறுத்தினேன். அடுத்த காங்கிரஸ் தலைவராக காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவரும் வர மாட்டார்கள் என்று தெளிவாக கூறிவிட்டார் என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லியில் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அசோக் கெலாட் சந்தித்துப் பேசினார். அப்போது, கட்சித் தலைவர் தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப்போவதாக சோனியா தெரிவித்தார். இதையேதான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பிய சசி தரூரிடமும் தெரித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றால், ராஜஸ்தான் முதல்வராக இருப்பீர்களா என அசோக் கெலாட்டிடம் கேட்டபோது,"இரு பதவிகளிலும் இருப்பதால் எனக்கு பிரச்சினை எதுவும் இல்லை. எந்தப் பதவியும் இல்லை என்றாலும் கவலையில்லை. ராகுலுடன் சேர்ந்து மக்களை திரட்டி, பாஜக கொள்கைகளுக்கு எதிராக போராடுவேன்" என்று தெரிவித்திருந்தார்.

அசோக் கெலாட்டின் இந்த பதில் குறித்து ராகுல் காந்தியிடம் கேட்டபோது, "ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறையை ஆதரிப்பேன்" எனத் தெரிவித்திருந்தார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியான நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், தேர்தலில் குதிக்கலாம் என்று தெரிகிறது. தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவது குறித்த தனது விருப்பத்தை சசிதரூர் ஏற்கெனவே சோனியாவிடம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், கட்சித் தலைவர் தேர்தலில் மனீஷ் திவாரி, மல்லிகார்ஜூன கார்கேவும் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி தேர்தலில் தான் ஏன் போட்டியிடக் கூடாது என்று திக் விஜய் சிங்கும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து