முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பபூன் விமர்சனம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      சினிமா
Baboon-Review 2022-09-24

Source: provided

தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டவன். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்ற பழமொழிதான் படத்தின் ஒன் லைன். கதை, நாடகங்களில் பபூன் வேடம் போடும் வைபவ், அத்தொழிலை விட்டு விட்டு வெளிநாடு போய்ப் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். வெளிநாடு செல்வதற்கான பணம் சேர்க்க லாரி ஓட்டுநர் வேலைக்குச் செல்கிறார். அப்போது அவர் ஓட்டிவந்த வண்டியில் போதைப்பொருள் இருக்கிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல திருப்பங்கள் உருவாகிறது. அவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்கிறார்? கடைசியில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது இந்த பபூன் படம். வைபவ் நாடகக் கோமாளி வேடத்துக்கு ஏற்ப இருக்கிறார். பயப்பட வேண்டிய காட்சிகளிலும் பதறாமல் இருக்கிறார். வைபவின் நண்பணாக படம் முழுக்க வருகிறார் பாடகர் ஆத்தங்குடி இளையராஜா. ஈழத்தமிழ் அகதிப் பெண்ணாக நாயகி அனகா நடித்திருக்கிறார்.அரசியல் தலைவர்களாக வரும் ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், ஆடுகளம் நரேன் ஆகியோர் தற்கால அரசியல்வாதிகளை நினைவுபடுத்துகிற வேடத்தில் நடித்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக வரும் தமிழரசன் அதற்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார். எல்லோரும் தேடும் பெரும்புள்ளி வேடத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மிரட்டுகிறார். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு கடற்கரை  ஓரங்களை அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. சந்தோஷ்நாராயணனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். காவல்துறை அதிகாரியை தட்டிக்கேட்கும் நாயகி, கண்ணாடி முன் நின்று தன்னைத் தானே திட்டிக்கொள்ளும் வைபவ். இப்படியான பலமிக்க பல காட்சிகளை அமைத்துள்ள இயக்குநர் அசோக்வீரப்பனுக்கு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து