முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷப் பண்டுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் களமிறங்கியது ஏன்? - கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      விளையாட்டு
Rohit-Sharma 2022--09-21

Source: provided

நாக்பூர் : ஆஸி.க்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ரிஷப் பண்டுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் களமிறங்கியது ஏன் ? - கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

இந்தியா பந்துவீச்சு....

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. பலத்த மழை காரணமாக தாமதமாக துவங்கியது. அதன் காரணமாக 8 ஓவர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் 2 ஓவர்கள் வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அணியில் ரிஷப்பண்ட்...

பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 7.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 8 ஓவர்கள் மட்டுமே கொண்டு இந்த போட்டியானது நடைபெற்றதனால் இந்த ஆட்டத்தில் கூடுதல் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

ரோகித் சர்மா பேட்டி....

ரிஷப் பண்ட்டிற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் களமிறங்க என்ன காரணம் என்பது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது:- ரிஷப் பண்ட்டை களம் இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இறுதி நேரத்தில் டேனியல் சாம்ஸ் ஆப் கட்டர்களை வீசுவார் என்பதனால் தினேஷ் கார்த்திக்கை களம் இறக்க நினைத்தேன். அதேபோன்று அவரும் தனது ரோலை மிகச் சிறப்பாக செய்து கொடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார் என தினேஷ் கார்த்திகை ரோகித் சர்மா பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து