முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனிடம் சரண் அடையும் வீரர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      உலகம்
Putin 2022-09-25

Source: provided

மாஸ்கோ: உக்ரைனிடம் ரஷ்ய ராணுவ வீரர்கள் தானாக சரண் அடைந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று புடின் எச்சரித்துள்ளார்

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய ராணுவத்துக்கு படையை திரட்டும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. ரஷ்ய ராணுவத்துக்கு சுமார் 3 லட்சம் படை வீரர்களை திரட்ட அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதற்கிடையே உக்ரைனிடம் ரஷ்ய ராணுவ வீரர்கள் தானாக சரண் அடைந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை சரியாக பின்பற்ற வேண்டும். பின்பற்ற மறுத்தாலோ, சண்டையிட மறுத்தாலோ, உக்ரைனிடம் தானாக சரண் அடைந்தாலோ அவர்களுக்கு 10 ஆண்டுகளுகள் ஜெயில் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்த நிலையில் புடினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் உக்ரைனிடம் ரஷ்ய வீரர்கள் சரண் அடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு சரண் அடையும் ரஷ்ய வீரர்கள் பொதுமக்களை போன்று நடத்தப்படுவார்கள் என்று ரஷ்ய மொழியில் ஜெலன்ஸ்கி உறுதி அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து