முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 3.40 கோடி பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      தமிழகம்
Ma-Subramaini 2022-09-19

Source: provided

சென்னை: தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்கள் 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 926 பேர். இதுவரை 86 லட்சத்து 31 ஆயிரத்து 976 பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இன்னும் 3 கோடியே 40 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்யடிவர்கள் உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சென்னை விருகம்பாக்கத்தில் 38-வது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 90 லட்சமாவது பயனாளியைச் சந்தித்து அவருக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கினார்.  அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

வரும் 30-ம் தேதி  வரை சுகாதார துறையின் 11,333 மருத்துவக் கட்டமைப்புகளிலும் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்கள் 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 926 பேர். இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 86 லட்சத்து 31 ஆயிரத்து 976 பேர். இன்னும் 3 கோடியே 40 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்யடிவர்கள் உள்ளனர்  என்று அவர் கூறினார். தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடுகிற பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இதை பொதுமக்கள் பயன்படுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து