முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு ஆண்டில் அதிக வெற்றி: பாகிஸ்தானின் சாதனையை முறியடித்தது இந்திய அணி

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      விளையாட்டு
Indian-team 2022--09-26

Source: provided

ஐதராபாத் : ஐதராபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். இதனால் ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

இதற்கு முன்பு பாகிஸ்தான் அணி 2021-ம் ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 20 வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது. அதை இந்தியா முறியடித்தது. இந்தியா இந்த ஆண்டில் இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் 29 ஆட்டத்தில் விளையாடி 21-ல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து