முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரிய வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 7 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      உலகம்
Death 2022-09-27

Source: provided

சியோல்: தென் கொரியாவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் டோஜியோன் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு வணிக வளாகத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. வணிக வளாகம் முழுவதும் தீ பரவியது. இதுபற்றி அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்த வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது. மேலும் அங்கு பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் வணிக வளாகம் அருகில் வசித்து வந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

அதிர்ஷ்டவசமாக இரவு நேரம் இந்த தீ விபத்து நடந்ததால் பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து