எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்கள் சிலர் சஞ்சு சாம்சனின் பெயரை முழங்கியபடி இருந்தனர். அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. அதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ரசிகர்கள் இன்றைய போட்டியின்போது அவர் புகைப்படம் இடம்பெற்றுள்ள டி-ஷர்ட்டை அணிந்து போட்டியை பார்க்க வருவார்கள் என தெரிகிறது.
இந்த நிலையில், பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த சூர்யகுமார் யாதவ், தனது போனில் சஞ்சு சாம்சனின் போட்டோவை ரசிகர்களை நோக்கி காட்டியுள்ளார். அதோடு ‘தம்ப்ஸ் அப்’பும் சொல்லியுள்ளார். அதை ரசிகர்கள் தங்கள் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது சஞ்சு சாம்சன், நியூஸிலாந்து-ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். அவர் தென்னாப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
____________
டி20 கிரிக்கெட்டில் மோசமான
சாதனை படைத்தார் 'பும்ரா'
காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த பும்ரா டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடினார். இந்த தொடரின் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா இரண்டாவது போட்டியின் போது அற்புதமாக பந்து வீசி இருந்தார். ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் அவர் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தது அவருடைய பவுலிங் குறைபாட்டை வெளிக்காட்டியது. அதோடு டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் பலமே ரன்களை கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான்.
ஆனால் இதற்கு மாறாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் பந்து வீசிய அவர் விக்கெட்டை வீழ்த்தாமல் 50 ரன்களை வாரி வழங்கினார். இதுவே டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2016-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அதன் பின்னர் தற்போது தான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர் எந்த போட்டியிலும் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்தது கிடையாது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
___________
கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன்
வருகை தந்த தென் ஆப்பிரிக்க வீரர்..!
திருவனந்தபுரம் வந்தடைந்த தென்ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தொடரை வென்ற கையோடு திருவனந்தபுரம் வருகை தந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் நேற்று பயிற்சியை தொடங்கினர்.
இதற்கிடையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா வீர்ர கேசவ் மகாராஜ் திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை தந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
___________
தென்னாப்பிரிக்காவுக்கு தொடர்:
காயத்தால் தீபா ஹூடா விலகல் ?
27 வயதான தீபகே ஹூடா, இந்திய அணிக்காக 12 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம் பெற்றிருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக வரும் 28-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல். ஆஸ்திரேலிய தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல். அதே போல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் விளையாடவில்லை. அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிப்போர்ட் செய்ய வேண்டி உள்ள காரணத்தால் இதில் பங்கேற்கவில்லை.
____________
டி 20 தரவரிசையில் இந்திய
அணி தொடர்ந்து ஆதிக்கம்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி 20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி ஒரு புள்ளி கூடுதலாக பெற்று 268 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி இந்தியாவைவிட 7 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தலாம்.
______________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்
22 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.100560-க்கும் விற்பனையானது.
-
தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்கள் நீக்கம்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
22 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்
22 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க.
-
10 அம்ச கோரிக்கை தொடர்பாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
22 Dec 2025சென்னை, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம
-
பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
22 Dec 2025சென்னை, மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39 ஆயிரம் விண்ணப்பங்கள் தற்போது வரை வந்துள்ளன: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
22 Dec 2025சென்னை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளதா
-
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நியூசி., பிரதமர் லக்சன் பேச்சு
22 Dec 2025புதுடெல்லி, இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வா
-
கிரிக்கெட்டையே விட நினைத்தேன்: 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்தார் ரோகித்
22 Dec 2025மும்பை, ஐ.சி.சி.
-
2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
22 Dec 2025வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
575 ரன் குவிப்பு....
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-12-2025.
23 Dec 2025 -
தங்க நகைகள் மீதான கடன்களில் எச்சரிக்கையாக இருக்க நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
23 Dec 2025சென்னை, நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி
-
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக தேர்தலை எதிர்கொள்வோம்: பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி
23 Dec 2025சென்னை, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்கொள்வோம் என்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் முன் இந்து அமைப்பினர் போராட்டம்
23 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர்.
-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
23 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்தித்து பேச்சு: அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை
23 Dec 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் சந்தித்து பேச
-
பீகாரில் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க. வலிமையை காட்டிய நிதின் நபீன்
23 Dec 2025பாட்னா, பீகாரில் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க.வின் செயல் தலைவர் நிதின் நபீன் பா.ஜ.க. வலிமையை காட்டியுள்ளார்.
-
நெதர்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்: கூட்டத்தின் மீது கார் மோதி 9 பேர் காயம்
23 Dec 2025ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணுவகுப்பு காண கூடியிருந்தவர்கள் மீது மோதிய கார் ; 9 பேர் காயம்
-
உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள்: தேசிய விவசாயிகள் தினத்தில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
23 Dec 2025சென்னை, உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள் என்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளஆர்.
-
அமெரிக்கா: சிறிய ரக விமானம் கடலில் விழுந்ததில் 5 பேர் பலி
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளான
-
இலங்கை கடற்படையால் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
23 Dec 2025ராமேஸ்வரம், எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
-
சேலத்தில் டிச. 29-ம் தேதி நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல: அன்புமணி தரப்பு விளக்கம்
23 Dec 2025சென்னை, சேலத்தில் 29-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல.
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து நிச்சயம் வேண்டும்: அதிபர் ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
23 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
-
வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு - பதற்றம்
23 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை நிறுத்தினேன்: டொனால்ட் ட்ரம்ப்
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.


