முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்குதல்: 23 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      உலகம்
Russia 2022--09-30

Source: provided

கீவ் : தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜபோரிஜியாவில் பொதுமக்கள் சென்ற வாகனம் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 7 மாதங்களாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. மேலும் பல நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.  இந்த நிலையில், ஜபோரிஜியாவில் பொதுமக்கள் சென்ற வாகனம் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் காயமடைந்துள்ளதாக ஜபோரிஜியா பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் சென்றவர்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தங்கள் உறவினர்களை பாதுகாப்பாக அழைத்து கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து