முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ரா விலகல் எதிரொலி: இந்திய அணியில் முகம்மது சிராஜ்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      விளையாட்டு
Mohammed-Siraj 2022--09-30

Source: provided

புதுடெல்லி : காயம் காரணமாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு டி20 தொடரில் எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கும் அவருக்கு பதிலாக முகம்மது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதுகு வலியால்...

28 வயதான ஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடியிருந்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் பும்ரா பங்கேற்கவில்லை. முதுகு வலி காரணமாக அவர், களமிறங்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

குணமடைய நீண்ட...

ஆனால் பும்ரா, இந்திய அணியினருடன் திருவனந்தபுரம் பயணிக்கவில்லை என்பது தெரியவந்தது. தற்போது அவர், முதுகு வலியின் தீவிரத் தன்மையை அறிந்து கொள்ள பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். முதுகு வலி பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை என்ற போதிலும் அதில் இருந்து பும்ரா குணமடைய நீண்ட காலம் ஆகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 2-வது போட்டி...

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளார். இந்த நிலையில், பும்ராவுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியுடன் சிராஜ் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் பும்ராவுக்கு மாற்று வீரர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து