முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுகாதார நிறுவன இயக்குனர் குழுவில் இந்தியருக்கு பதவி

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
Vivek-Moorthy 2022-10-06

Source: provided

வாஷிங்டன்: உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்துள்ளார். 

டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கிறார். இந்த பதவியுடன் அவர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாகவும் இருப்பார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 

டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார். இவரது மனைவி ஆலிஸ் சென். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். டாக்டர் விவேக் மூர்த்தியின் பூர்வீகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து