எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முதல்வரின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு இயல்பாக 448 மி.மீ. மழை கிடைக்கப் பெறுகிறது. இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதோடு, கனமழை முதல் அதி கன மழை பொழிவு ஏற்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இயல்பான மழை அளவை விட 35 முதல் 75 விழுக்காடு கூடுதலாக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வர் 26.09.2022 அன்று ஆய்வு மேற்கொண்டு, பேரிடர்களின் தாக்கத்தை குறைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள பல்வேறு துறைகள், முப்படை, பிரிவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் தலைமைச்செயலர் 13.09.2022 அன்று ஆய்வு மேற்கொண்டு, பேரிடர்களின் தாக்கத்தை குறைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள கூடுதல் தலைமைச்செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் தலைமையில் 03.10.2022 அன்று காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர்களின் தாக்கத்தை குறைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், மாவட்ட அளவில், பருவமழை காலத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து வருவாய் நிருவாக ஆணையரின் கடித வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1) வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருவதோடு, பொதுமக்கள் 1070 கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலம் பொது மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.
2) மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.
3) 94458 69848 வாட்ஸ் அப் எண் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4) TNSMART செயலி மூலம் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது.
5) பொதுவான எச்சரிக்கை நடைமுறை வாயிலாக செல்பேசிகள் மூலம் பொது மக்களுக்கு புயல், கனமழை வெள்ள அபாய எச்சரிக்கை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6) 1,51,050 முதல் நிலை மீட்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
7) பேரிடர் தாக்கத்திற்கு உள்ளாகும் 16 மாவட்டங்களில், ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வர்களுக்கு தேடல், மீட்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
8) தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் பேரிடர்களை சந்திக்க முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளனர்.
9) மாநிலத்தில் மீட்புப் பணிகளுக்காக 90 ஹெலிக்காப்டர் இறங்குதளங்கள் தயார் நிலையில் உள்ளன.
10) பேரிடர் காலங்களில் கடலோர மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்காக 1 லட்சத்து 13 ஆயிரம் நபர்களை தங்க வைக்கக்கூடிய 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் 4,973 பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட கண்டறியப்பட்டுள்ளன.
11) மீட்பு நடவடிக்கைகளுக்காக, 2,897 JCB இயந்திரங்களும், 2,115 ஜெனரேட்டர்களும், 483 நீர் இறைப்பான்களும், 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 5,900 கட்டுமரங்களும், 48,100 மோட்டார் படகுகளும் மற்றும் 5,800 இயந்திர படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
12) வெள்ளத் தடுப்புக்கென போதுமான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
13) மின்கம்பங்கள், மின்கடத்தி மற்றும் மின்மாற்றிகள் தயார் நிலையில் உள்ளன.
14 மீனவர்களுக்கு, Satellite Phone, Navtex, Navic மூலம் பேரிடர் குறித்த தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15) நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பாலங்கள், சிறுபாலங்களில் தூர் வாரவும் அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
16) மழைக்காலத்தில், பொது மக்களுக்கு தங்கு தடையின்றி பால் மற்றும் பால் பவுடர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
17) கிடங்குகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
18) அனைத்து மாவட்ட தலைமை மருத்துமனைகளும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், போதுமான மருத்துவர்கள், செவிலயர்கள் மற்றும் மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன.
இந்த வகையில், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
டான் பிராட்மேன் போல... கில்லுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
08 Jul 2025மும்பை : 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி
08 Jul 2025வாஷிங்டன் : டெக்சாஸ் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சி.எஸ்.கே. 3-வது இடத்துக்கு சரிந்தது: ஐ.பி.எல். பிராண்ட் மதிப்பில் ஆர்.சி.பி. அணிக்கு முதலிடம்
08 Jul 2025மும்பை : ஆர்.சி.பி. அணியின் பிராண்ட் மதிப்பு 227 மில்லியனாக இருந்து 269 மில்லியனாக அதிகரித்துள்ளது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இறக்குமதி வரிக்கான கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
08 Jul 2025வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உணவு கெட்டுப்போனதாக கூறி ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.எல்.ஏ.
09 Jul 2025மும்பை : மகாராஷ்டிரத்தில் உணவு கெட்டுப்போனதாகக் கூறி உணவக ஊழியரை, சிவசேனை எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
ராஜஸ்தானில் கனமழைக்கு திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை
09 Jul 2025ராஜஸ்தான் : ராஜஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பதற்கு முன்பே அடித்து செல்லப்பட்டது.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
கணவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்: ‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
09 Jul 2025சென்னை : கணவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை அடுத்து 1980-களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.