முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      ஆன்மிகம்
Thiruvannamalai 2022 11 27

Source: provided

தி.மலை : கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 24-ம் தேதி இரவு தொடங்கியது. பின்னர், 25-ம் தேதி இரவு பிடாரி அம்மன் மற்றும் 26-ம் தேதி இரவு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் நேற்று (27-ம் தேதி) காலை 6.12 மணியளவில கொடியேற்றம் நடைபெற்றது.

தங்க கொடி மரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் கொடியேற்றனர். அப்போது, கோயிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகார என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். 

இதன் பிறகு பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.மாட வீதியில் வெள்ளி விமானங்களில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் அண்ணாமலையார், பராசத்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் காலையில் பவனி வந்து அருள்பாலித்தனர். மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம் மற்றும் சிம்ம வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வலம் வந்தனர். பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பித்தும் மற்றும் அர்ச்சனை செய்தும் பக்தர்கள் வழிபட்டனர்.

டிசம்பர் 2-ம் தேதி காலை 63 நாயன்மார்கள் ஊர்வலமும், அன்று இரவு வெள்ளி தேரோட்டமும், டிசம்பர் 3-ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து