முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025      உலகம்
Gaza 2024-04-15

Source: provided

டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது. காசாவில் 15,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இஸ்ரேலிய இராணுவம் அவர்களை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் மேல் சிகிச்சை கிடைக்காமல் நாசர் மருத்துவமனையில் 2 இளைஞர்கள் இறந்தனர். காசாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் இஸ்ரேலால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

மீதமுள்ள சில மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ அவசதிகளோ ல்லது மருந்துகளோ இல்லை. கடுமையான நோய்கள் உள்ளவர்களுக்கு பாராசிட்டமால் மட்டுமே கொடுக்க முடிகிறது. மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. 

 அதேசமயம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக வாடிய பொதுமக்களுக்காக லாரிகளில் நிவாரணப் பொருட்கள் ஐநா உள்ளிட்ட அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை பொதுமக்கள் முண்டியடித்து அள்ளிச்செல்லும்  வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. கடந்த 2023  அக்டோபர் முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 68,000 திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து