முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் டிச. 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Weather-Center 2021 06-30

Source: provided

சென்னை : தமிழகத்தில் டிச. 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 01.12.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீரனுர் (புதுக்கோட்டை) 6 செண்டி மீட்டர் மழையும், வீரபாண்டி  4 செண்டி மீட்டர் மழையும், பவானிசாகர் (ஈரோடு), ஆண்டிபட்டி தலா 3 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.  மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுவும் வழங்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து