முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2வது ஆக்கி போட்டி : பிளேக் கோவர்ஸ் ஹாட்ரிக் கோல் : இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      விளையாட்டு
Australia-wins 2022-11-27

Source: provided

அடிலெய்டில் : உலக கோப்பை ஆக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள 2 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி அடிலெய்டில் நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிளாக் கோவர்ஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 7-4என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் பிளேக் கோவர்ஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார். ஜாக் வெல்ச் 2 கோல் ,ஜேக்கப் ஆண்டர்சன் ,ஜேக் விட்டன் தலா ஒரு கோல் கோல் அடித்தனர். இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல் அடித்தார்.ஹர்திக் சிங், ரஹீல் முகமது,தலா ஓரு கோல் அடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து