முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகுமாரின் காரி விமர்சனம்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      சினிமா
Sasikumar 2022-11-28

Source: provided

சசிகுமார், பார்வதி அருண், ஆடுகளம் நரேன், பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காரி. ஹேமந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கதை; ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர், சிவனேந்தல் என இரண்டு கிராமங்களுக்கும் பொதுவாக கருப்பசாமி கோவில் உள்ளது. இவர்களுக்குள் இந்த கோவில் நிர்வாகத்தை யார் நடத்துவது என மோதல் இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் கோவில் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது. இதற்காக சென்னையில் குதிரை ஜாக்கியாக இருக்கும் சசிகுமார் கிராமத்திற்கு வருகிறார். இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதே படத்தின் மீதி கதை. சசிகுமார் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக அருமையாக செய்துள்ளார். கதாநாயகி பார்வதி அருண் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்து அசத்தியுள்ளார். பார்வதியின் அப்பாவாக பாலாஜி சக்திவேல், சசிகுமாரின் அப்பாவாக ஆடுகளம் நரேன், ஊர் பெரியவராக நாகி நீடு அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். அம்மு அபிராமி, ராம்குமார், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். மண்வாசம் மாறாத அழகான கிராமத்து கதையை சிறப்பாகவே கையாண்டு உள்ளார் இயக்குனர் ஹேமந்த். இமானின் இசை, கேமரா ஒர்க், எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியால் ஊருக்கும், காளைகளுக்கும் கிடைக்க கூடிய நன்மைகளை மிக எளிமையாக சொல்லியிருக்கும் காரிக்கு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து