Idhayam Matrimony

யூதர்களை குறிவைத்து ஆஸி.யில் நடந்த துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2025      உலகம்
Gun 2023-10-05

கான்பரா, யூதர்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

யூத மதத்தினரின் தீபத்திருநாள் பண்டிகையான ஹனுக்கா பண்டிகை 8 நாட்கள் நடைபெறும். இந்த பண்டிகையின் முதல் நாளான நேற்று முன்தினம்  உலகம் முழுவதும் யூதர்கள் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி பண்டிகையை கொண்டாடினர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் போண்டி கடற்கரை அருகே ஹனுக்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிட்னி பகுதியை சேர்ந்த ஏராளமான யூதர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஹனுக்கா பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த இரு பயங்கரவாதிகள் அங்கு இருந்த யூதர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூட்டில் மற்றொரு பயங்கரவாதி படுகாயமடைந்தான்.

அதேவேளை யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் 40 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து