Idhayam Matrimony

த.வெ.க. வேட்பாளர்களை தலைவர் விஜய் அறிவிப்பார்: த.வெ.க. தலைமை கழக்கம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2025      தமிழகம்
Vijay-1 2024-10-28

சென்னை, த.வெ.க. வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் என த.வெ.க. தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனிடையே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேவேளை, சில தொகுதிகளுக்கு த.வெ.க. வேட்பாளர்கள் இன்று அறிமுக செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல் பரவின.

இந்நிலையில், த.வெ.க. வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் என்று தமிழக வெற்றிக் கழக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக த.வெ.க. வெளியிட்ட அறிவிப்பில், வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் தலைவர். அதுவரை களத்தைத் தயார்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து