Idhayam Matrimony

திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2025      இந்தியா
Kerala-BJP-2025-12-14

திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த தேர்தலில் 26 கிராம பஞ்சாயத்து, 2 நகராட்சி மற்றும் 1 மாநகராட்சியில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 50 இடங்களில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். கூட்டணி 4 மாநகராட்சிகளிலும், எல்.டி.எப். கூட்டணி 1 மாநகராட்சியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழலில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயராக வி.வி.ராஜேஷ் பதவியேற்க வாய்ப்புள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகா, துணை மேயராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல். பா.ஜ.க. தலைமை புதிய மேயரை அறிவிக்கும் என இருவரும் தெரிவித்துள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் விரைவில் திருவனந்தபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தின் முன்னாள் பா.ஜ.க. தலைவரான வி.வி.ராஜேஷ், இந்த தேர்தலில் கொடுங்கனூர் வார்டில் வெற்றி பெற்றார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.ஸ்ரீலேகா, சாஸ்தாமங்கலம் வார்டில் வெற்றி பெற்றார். இவர்களில் வி.வி.ராஜேஷ் மேயராகவும், ஸ்ரீலேகா துணை மேயராகவும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து