எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும், மகனும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதனை திட்டமிட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல் என்று தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் ஈடுபட்டனர் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் பாகிஸ்தானை சேர்ந்த தந்தையும், மகனும் என்பதை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய 50 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், துப்பாக்கியால் சுடப்பட்ட அவரது 24 வயது மகன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் காவல்துறை கண்காணிப்பில் உள்ளார்.
இவர்கள் இருவரைத் தவிர வேறு எவரும் இந்தத் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்திய காவல்துறை, யூத சமூகத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரே இரவில் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு அருகில் இரண்டு ஐஇடி வெடிகுண்டுகளை காவல்துறை கண்டறிந்து அவற்றை செயலிழக்கச் செய்தது.
விசாரணையின்போது, 50 வயதுடைய அந்த நபர் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர் என்பதையும், அவரது பெயரில் ஆறு துப்பாக்கிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் கண்டறிந்தோம். அந்த ஆறு துப்பாக்கிகளும் போண்டி கடற்கரையில் நடந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது. அந்த ஆயுதங்கள் எவ்வாறு பெறப்பட்டன, பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து காவல்துறை விரிவான விசாரணை நடத்தும்” என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


