முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் நாளை அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      வர்த்தகம்
Reserve-Bank 2022-11-29

மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் நாளை (டிசம்பர் 1-ஆம் தேதி) அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. விரைவில் பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, கொடாக் மகேந்திரா வங்கியும் இணையவுள்ளன.

மும்பை,  தில்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1ஆம் தேதியும், அகமதாபாத், குவகாத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து