முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபாசமாக பேசியதாக வழக்கு: மன்னிப்பு கோரினார் சைதை சாதிக்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : ஐகோர்ட்டின் உத்தரவுப்படி பா.ஜ.க. நடிகைகளிடம் மன்னிப்பு கோரி சைதை சாதிக் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்

சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து ஆபாசமாக பேசியதாக போலீசில் புகார் செயப்பட்டது.. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் குறித்து மனுதாரர் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருப்பதால், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என, அவர் அந்த நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து, அதுவரை சைதை சாதிக்கை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே ஐகோர்ட்டின் உத்தரவுப்படி பாஜக நடிகைகளிடம் மன்னிப்பு கோரி சைதை சாதிக் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தினமும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து சைதை சாதிக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து