முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஜனவரி 15-க்குள் தொடக்கம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
Muthuswamy 2022-12-02

அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஜனவரி 15-க்குள் தொடங்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது, 

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த பணிகள் தடைபட்டன. தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை எதிர்த்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தின் பலன்களை கூறி சம்மதிக்க வைத்துள்ளோம். இதனால், பவானி காலிங்கராயன் தடுப்பணையில் நடைபெற்று வரும் அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகளை வரும் ஜனவரி 15-க்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். 

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுக்கால கோரிக்கையாக இருப்பது அத்திக்கடவு - அவிநாசி திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்கள்வரை பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து