முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா நடத்தி வரும் போரில் வீரர்கள் 13 ஆயிரம் பேர் பலி: உக்ரைன் அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      உலகம்
Ukraine-war-1 2022 12 03

போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சுமார் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக் இதுபற்றி கூறுகையில், 

மூத்த ராணுவ அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த துருப்புகளின் எண்ணிகையும் கணிசமாக உள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து