முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வின் சாதனைகளை பொறுக்க முடியாத சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை ; தி.மு.க. சாதனைகளை பொறுக்க முடியாத சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

இந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபுவை பற்றி நான் பலமுறை பல நிகழ்ச்சிகளில் அவர் ஒரு செயல்பாபு என கூறியிருக்கிறேன். அவரும் அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஒரு முதல்வர்தான் அமைச்சர்களை வேலை வாங்குவார். ஆனால் அமைச்சர் சேகர்பாபு,  முதல்வரை வேலை வாங்கக்கூடியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். 

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பல்வேறு கல்லூரிகளை நம்முடைய அரசு தொடங்கியிருக்கிறது. அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் 47 கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை உரிமையை நாம் மீட்டுத் தந்திருக்கிறோம். பெண் ஒருவரை அர்ச்சகராக நியமித்திருக்கிறோம். கோவில் பொது சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். இது மிகப் பெரிய வரலாறு. 

இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறையில் மட்டும் செய்யப்பட்டிருக்கக்கூடிய சாதனைகள் எண்ணற்றவை. இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் சேற்றை வாரி இறைக்கிறார்கள். பொய் பித்தலாட்டத்தை அவர்கள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மதத்தை வைத்து நம் மீது பல பழிகளை, குற்றங்களை, குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், எந்த ஆதாரமும் கிடையாது. மன்னராட்சிக் காலமாக இருந்தாலும் சரி, மக்களாட்சிக் காலமாக இருந்தாலும் சரி, கோவில்கள் என்பது மக்களுக்காகத்தான். கோவில்கள் ஒரு சிலருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. அந்த நிலையை மாற்றத்தான் நீதிக்கட்சிக் காலத்தில் இந்தத் துறை உருவாக்கப்பட்டது. 

கோயில் சீரமைப்புப் பணிகளை இதுவரை இல்லாத அளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள். ஆட்சி என்கின்ற அந்த அதிகாரம், மக்கள் நம்மிடத்தில் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். ஆகவே, மக்களுடைய எதிர்பார்பிற்கு ஏற்ற வகையில், அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து