Idhayam Matrimony

குன்றத்து முருகன் கோவிலில் இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
Thiruparankundram 2022 12 04

Source: provided

குன்றத்து முருகன் கோவிலில் இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது

திருப்பரங்குன்றம் ; திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், அன்னம், வெள்ளி பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (5-ம் தேதி) மாலை 7 மணி அளவில் கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. நாளை 6-ம் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெறும். இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சிறிய வைர தேரில் எழுந்தருளுவார். 

பக்தர்கள் வடம் பிடிக்க சுவாமி ரத வீதிகள் வழியாக தேர் சுற்றி வந்து நிலையை அடையும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து