முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை: பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      அரசியல்
Annamalai 2022 12 08

எந்தவொரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் 

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தி.நகரில் உள்ள பா.ஜனதா மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை ,

 எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.  மேலும் கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து