எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மாண்டஸ் புயலால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் ராட்சத அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பி வருகின்றன. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.
புயல் காரணமாக, மாமல்லபுரம், கல்பாக்கம் உள்பட பல்வேறு மீனவ குப்பம் பகுதிகளில் நேற்று 2வது நாளாக பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கரையை நோக்கி பெரும் சீற்றத்துடன் அலைகள் வேகமாக வந்து மோதின. 10 அடி உயரத்துக்கு அலை எழுந்ததால் காலையில் நடைபயிற்சிக்கு சென்ற உள்ளூர் மக்களை போலீசார், தீயணைப்பு படையினர் திருப்பி அனுப்பினர். இதே போல் வெண்புருஷம் குப்பம், கொக்கிலமேடு குப்பம், தேவனேரி, சாலவான்குப்பம், புதுஎடையூர் குப்பம், பட்டிப்புலம் குப்பம், சூளேரிக்காடு குப்பம், புதிய கல்பாக்கம் குப்பம், நெம்மேலி குப்பம், திருவிடந்தை, செம்மஞ்சேரி குப்பம் வரை கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கரையை ஒட்டியுள்ள மீனவ குப்பங்களில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு செல்லும் சாலையோரம் இருந்த பெரிய காட்டுவா மரம் பலத்த சூறைக்காற்றினால் முறிந்து விழுந்தது. உடனே அவற்றை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
மாண்டஸ் புயல் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த தரைக்காற்று வீசியது. 10 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்ததால் பழவேற்காடு-காட்டுப்பள்ளி தரைமட்ட சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். காட்டுப்பள்ளி, காலாஞ்சி, பழவேற்காடு உள்பட கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களை நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்தார்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்வது வழக்கம். புயல் காரணமாக காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை. விசைப்படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் கட்டி வைத்துள்ளனர். சிறிய படகுகளை கிரேன் மூலம் கரைக்கு தூக்கி பாதுகாப்பாக வைத்துள்ளனர். புயல் காரணமாக காசிமேட்டில் 10 அடி உயரத்துக்கு கடல் சீற்றம் காணப்பட்டது. அதனால் கடற்கரைக்கு யாரும் செல்லக்கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் நேற்று காலையில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடற்கரை மணல் பகுதியை தாண்டி வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
பட்டினப்பாக்கத்தில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. இந்த படகுகளை மீனவர்கள் போராடி கரைக்கு கொண்டு வந்தனர். பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதே போல திருவொற்றியூரில் காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் ராட்சத அலையுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் சந்திரபாடி மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமம் தமிழக எல்லைக்கும், புதுக்சேரி மாநிலம் காரைக்கால் எல்லைக்கும் நடுவே உள்ள பகுதியாகும். இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் நேற்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் விரைந்து சென்று அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றி வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர்.
இதே போல், சீர்காழியை அடுத்த தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மழை நீர் வெளியேறாத நிலையில் நேற்று காலை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் நீர் வெளியேற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களை மீட்டு பாதுகாப்பாக தொடுவாய் அரசு பள்ளி மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது. இதனால் அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்த நிலையில், புதுச்சேரியின் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் மீதமிருந்த பொருட்களை மக்கள் தெருவில் எடுத்து வைத்திருந்தனர். அரசு தரப்பில் தூண்டில் வளைவு அமைக்காததால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி மக்கள் ஈ.சி.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் அங்கு நேரில் வருவதாக உறுதி தந்ததால் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர்,வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இன்று 89-வது நினைவு நாள்: வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
17 Nov 2025சென்னை : வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளை முன்னிட்டு அரவது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
-
ரஷ்யாவிடம் 25,500 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
17 Nov 2025புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்
17 Nov 2025திஸ்பூர் : அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவுள்ளது.
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
17 Nov 2025மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சி: பெற்றோரை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளுக்கு உதவ மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் உத்தரவு
17 Nov 2025கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவையான உதவிகளை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் உத்
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
தீர்ப்பு ஒரு தலைபட்சமானது: மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா விமர்சனம்
17 Nov 2025டாக்கா: வங்காள தேச முன்னாள் பிரதமர் மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.
-
சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
17 Nov 2025கேரளா, துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது
17 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டது.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
டெல்லி கார் வெடி குண்டு விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
17 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடி குண்டு விபத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
உலகக் கோப்பையில் அதிகமுறை பங்கேற்பு: புதிய சாதனை படைக்கிறார்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ
17 Nov 2025போர்ச்சு : மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ அடுத்தாண்டு உலகக் கோப்பையில் விளையாடி சாதனை நிகழ்த்தவிருக்கிறார்கள்.
அபார வெற்றி...
-
கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விலகல்?
17 Nov 2025மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
-
சவுதி அரேபியா சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு
17 Nov 2025மெக்கா: சவுதி விபத்தில் ஐதராபாத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.


