முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தா திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      சினிமா
Kantha-Review 2025-11-17

Source: provided

1950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவாகி இருக்கும் நாடகம் தான் காந்தா படத்தின் கதை. தன்னை ஆளாக்கிய இயக்குநர் சமுத்திரக்கனியின் கனவு திரைப்படத்தில் இருந்து வெளியேறுகிறார் நாயகன் துல்கர் சல்மான், ஒரு கட்டத்தில், மீண்டும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க காட்சியமைப்பில் துல்கர் சல்மான் சில மாற்றங்களை செய்கிறார். எப்படியாவது படத்தை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் போபம் கலந்த பொறுமையில் இருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. இருவரின் மோதல்களுக்கு இடையே தொடர்ந்து நடக்கும் படப்பிடிப்பின் போது ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலையை யார் செய்தார்? என்பதே மீதிப் படம். பழம்பெரும் நடிகராக நடித்திருக்கும் துல்கர் சல்மான், தான் ஒரு நடிப்பு சக்கரவர்த்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். பழம்பெரும் இயக்குநராக நடித்திருக்கும் சமுத்திக்கனி, இதுவரை பார்த்திராத வேறு ஒரு பரிணாமத்தில் அசத்துகிறார். நாயகி பாக்யஸ்ரீ, அக்காலத்து நடிகை போல வலம் வந்து கவர்கிறார். ராணா டகுபதியின் நடிப்பு சிறப்பு. இசைக் கோர்ப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். எழுதி இயக்கியிருக்கும் செல்வமணி செல்வராஜ், பழம்பெரும் நடிகர் ஒருவரது கதாபாத்திரத்தை கருவாக வைத்து கதையை நகர்த்திச் சென்றுள்ளார். மேக்கிங், தொழில்நுட்பம், கதை சொல்லல் ஆகியவை பாராட்டும்படி இருந்தாலும், அவற்றை தாண்டி, துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ ஆகியோரது நடிப்பு மிளிர்கிறது. மொத்ததில், ‘காந்தா’ சிறப்பான அனுபவம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து