Idhayam Matrimony

இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      தமிழகம்
Modi-2 2024-05-07

Source: provided

கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (புதன்கிழமை) இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அன்று காலை விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் அவர் கொடிசியா வளாகத்துக்கு சென்று மாநாட்டில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்புகிறார். பிரதமர் கோவை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் நாளை பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கோவை மாநகருக்கு வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து விமான நிலையம் வழியாக வர தடை செய்யப்பட்டு உள்ளது. மாறாக நீலாம்பூரில் இருந்து எல் அண்டு டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக வரவேண்டும்.

கோவையில் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பில் யூ-டர்ன் செய்து புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக எல் அண்டு டி பைபாஸ் அடைந்து செல்லலாம். நீலாம்பூரில் இருந்து கோவைக்குள் வரும் இலகு ரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோளப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக வரலாம்.

கோவையில் இருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் அரசு பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அவினாசி ரோடு, டைடல் பார்க் சந்திப்பில் யூ-டர்ன் செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் ரோடு வழியாக செல்லலாம். கோவையில் இருந்து வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள் நேரத்திற்கு தகுந்தாற் போல் சித்ரா வழியாக அனுப்பப்படும்.

நாளை பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வைர விமான நிலையத்துக்குள் வாகனங்கள் மற்றும் கால்டாக்சிகள் செல்ல தடை செய்யப்படுகிறது. அன்று விமான நிலையம் செல்பவர்கள் 12 மணிக்கு முன்பாக செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இருந்து நடந்து செல்ல வேண்டும்.

பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை அவினாசி ரோடு, மேம்பாலம் மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் அதற்கு தகுந்தாற்போல் மாற்று பாதையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதுபோன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் மாநகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது. நாளை வரை விமான நிலைய வாகன நிறுத்தத்தில் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து