எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கவுதாத்தியில்...
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் தொடர் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கவுதாத்தியில் நடைபெற உள்ளது.
கழுத்தில் காயம்...
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் காயம் காரணமாக அந்த போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக வெளியேறினார்.
டிஸ்சார்ஜ் ஆனார்...
பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் சுப்மன் கில், முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சுப்மன் கில் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சுப்மன் கில் வீடு திரும்பினாலும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனாலேயே 2-வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


