முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு: 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மனோ தங்கராஜ்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      தமிழகம்
Mano-Thangaraj

Source: provided

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 13 நபர்களுக்கும், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் கருணை அடிப்படையில் ஒரு நபருக்கும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

நேற்று (17.11.2025) தலைமைச் செயலகத்தில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 13 நபர்களுக்கும், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் கருணை அடிப்படையில் ஒரு நபருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக துணை மேலாளர் (தர உறுதி) பணியிடத்திற்கு ஒரு நபர், விரிவாக்க அலுவலர் நிலை-Il பணியிடத்திற்கு 06 நபர்கள், தொழில்நுட்பர் (இயக்குபவர்) பணியிடத்திற்கு 05 நபர்கள், தொழில்நுட்பர் (ஆட்டோ மெக்கானிக்) பணியிடத்திற்கு ஒரு நபருக்கும், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் கருணை அடிப்படையில் ஒரு நபர் என மொத்தம் 14 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளர் மருத்துவர் ந.சுப்பையன், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ், பால்வளத்துறை இணை மேலாண்மை இயக்குநர் ச.கவிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து