எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி ஷார்ஜா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து கரும்பு கோவைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் இங்கிருந்து ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்ல புக்கிங் செய்யப்படுகிறது. நேற்று முதல் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்படுகிறது. முதல் நாளில் ஒரு டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது. முழு கரும்பு கொண்டு செல்ல அதிக இடவசதி தேவைப்படுவதால், மற்ற பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் 400 கிலோ குறைத்து, 600 கிலோ கரும்பு மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |