முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக கமலஹாசன் பிப்ரவரியில் பிரச்சாரம் செய்ய திட்டம்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      தமிழகம்      அரசியல்
Kamal 2023 01 26

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக பிப்ரவரி முதல் வாரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள நடிகர் கமலஹாசன் திட்டமிட்டுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் பொறுப்பாளராக நிர்வாக குழு உறுப்பினரான அருணாசலம் நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும் தெரிவித்தார். 

இன்னும் 2 நாட்களில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பொறுப்பாளரான அருணாசலம் தலைமையின் கீழ் இந்த தேர்தல் பணிக்குழு செயல்படும். இதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசார வியூகங்களை பிரம்மாண்டமாக மேற்கொள்ள அருணாசலம் தலைமையிலான குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். 

இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பிரச்சாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டு உள்ளார். வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து