முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 40 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      உலகம்
Pak-Bua 2023 01 29

Source: provided

கராச்சி ; பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 40 பேர் பலியாகினர். 

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 48 பயணிகள் இருந்தனர். பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் பஸ் சென்ற போது ஒரு திருப்பத்தில் வேகமாக திரும்ப டிரைவர் முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. 

சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 40 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து