முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      தமிழகம்
Sellur-Raju 2023 01 29

Source: provided

மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

ஆர்.ஜெ. தமிழ்மணி கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை கோச்சடையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறக்கட்டளை நிறுவனர் ஜெயந்திராஜூ ஆகியோர் துவக்கி வைத்தனர். அருகில் அறக்கட்டளை நிர்வாகிகள் கணேஷ் பிரபு, ரம்யா கணேஷ் பிரபு, செளமியா விஜயகுமார், விபின் சாகர். விஷ்ணுசாகர், வருண் சாகர். மற்றும் அ.தி.மு.க.நிர்வாகிகள் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை, கவுன்சிலர் பி.கே.எம்.மாரிமுத்து, மெடிக்கல் குபேந்திரன் ஆகியோர் உள்ளனர்

பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கூறுகையில், ஈரோடு தேர்தலில் குழப்பமே இல்லை. நாங்கள் தெளிவாக உள்ளோம்.ஓ.பி.எஸ்.வேட்பாளர் அறிவிப்பேன் எனக்கூறியது குறித்த கேள்விக்கு, எல்லோரும் ஜனநாயக முறைப்படி அவரவர் அறிவிக்க உள்ளார்கள்.மக்கள் இ.பி.எஸ். தரப்பையே அ.தி.மு.க. என்று நினைக்கின்றனர். மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் தான் தலைவர்கள் மக்கள் பார்த்து யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.மூத்த மத்திய அமைச்சராகவும் திமுகவின் பொறுப்பு மிக்க தலைவராகவும் இருக்கும் டி ஆர் பாலு வன்முறையை கையில் எடுக்கும் வகையில் பேசுவது முறையல்ல.ஆசிரியர் வீரமணிக்கு டி.ஆர்.பாலு குறிப்பிட்டது போல எதுவும் நடக்கவில்லை.டி.ஆர்.பாலுவின் பேச்சு கண்டிக்கத்தக்கது. டி.ஆர்.பாலுவின் பேச்சு திமுக எவ்வளவு வன்முறை எண்ணம் நிறைந்தது என்பதை காட்டுகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார். மக்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தான் உள்ளனர்.பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து அன்றைய திமுக மாணவர் அணி தலைவர் சீனிவாசன் வெற்றி பெறவில்லையா. மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் தான் நீதிமான்கள். மக்கள் நினைத்தால் தான் வெற்றி பெற முடியும்.பெருந்தலைவர் காமராஜரை விட இளங்கோவன் என்ன பெரிய ஆளா.இடைத்தேர்தல் சாக்கடை தேர்தல் எனவும், அதில் எல்லாம் நிற்க மாட்டோம் என ஒரு காலத்தில் பேசிய இளங்கோவன் தற்போது எதற்காக தேர்தலில் நிற்கிறார் என தெரியவில்லை.திமுக ஆட்சியில் இருப்பதால் தன்னை கரை சேர்ப்பார்கள் என நினைத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிற்கிறாரா என தெரியவில்லை. 

அதிமுக தொடக்கத்திலேயே வேகமாக செல்ல இருக்கிறது. தொடக்க பந்தயத்திலேயே வேகமாக அதிமுக செல்ல உள்ளது.நேற்று இருப்பவர் இன்று இல்லை இன்று இருப்பவர் நாளை இல்லை. எல்லாமே நல்லபடியாக நடக்கும் அதிமுக சிறப்பாக போய்க்கொண்டுள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை எங்களுடைய எதிரிகளையே எங்களால் பார்க்க முடியவில்லை.இடைத்தேர்தலில் ஜனநாயகம் தான் வெல்லும். பணநாயகம் வென்றதாக சரித்திரம் இல்லை.ஈரோடு பொதுமக்கள் சிறப்பானவர்கள்பெரியார் பிறந்த பூமி என்பதால் நம்பிக்கையோடு நிற்க  உள்ளோம்.மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து