முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட் போட்டியில் புவனேஸ்வர் குமார் சாதனையை முறியடித்த யுஸ்வேந்திர சாஹல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      விளையாட்டு
Yuzvendra-Sahal 2023 01 30

Source: provided

லக்னோ : டி-20 கிரிக்கெட் போட்டியில் புவனேஸ்வர் குமார் சாதனையை முறியடித்துள்ளார் மற்றொரு இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல்.

சமநிலையில்...

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

90 விக்கெட்கள்...

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் இரண்டு ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் உட்பட 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய பவுலராக சாதனை ஒன்றினை படைத்துள்ளார். இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக புவனேஸ்வர் குமார் முதலிடத்தில் இருந்தார். அவர் 87 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

டி20 கிரிக்கெட்டில்... 

அந்த சாதனையை யுஸ்வேந்திர சாஹல் முறியடித்துள்ளார். அவர் 75-வது போட்டியில் விளையாடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து