முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ. பன்னீர் செல்வம் தரப்புவேட்பாளர் செந்தில்முருகன்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      தமிழகம்
Senthil-Murugan 2023 02 01

Source: provided

சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பெயரை அறிவித்தார் ஓ.பி.எஸ். அங்கு செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதுடன் அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறியிருக்கிறது. கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர். ஆனால் பாஜக இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதன்மூலம், ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவதை எடப்பாடி உறுதி செய்திருக்கிறார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை வேட்பாளரை அறிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியின் தொண்டர் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்த அவர், செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார். அதேசமயம் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் தனது வேட்பாளரை திரும்ப பெறுவதாகவும் கூறியிருக்கிறார்.

அதிமுகவின் சின்னம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றார். சின்னம் முடங்கினால் தனி சின்னத்தில் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து