முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரம்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Ops 20221 02 02

Source: provided

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் செந்தில் முருகனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவர் கட்சியின் தீவிர உறுப்பினர். தீவிர விசுவாசி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். 

அவரை ஆதரித்து  கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி ஆகியோர் ஏற்கனவே பிரசாரம் செய்து வருகிறார்கள். இன்று முதல் நானும் (ஓ.பன்னீர் செல்வம்) நிர்வாகிகளும் செந்தில்முருகனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். இந்த தேர்தலில் எங்களுடைய நிலையை ஜனநாயக பண்பை ஈரோடு கிழக்கு தொகுதியில் சொல்வோம். தீர்ப்பளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் வாக்காளர்களிடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து