முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபுதாபியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் தீ : ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      உலகம்
Air 20221 02 02

Source: provided

அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 

கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு 1000 அடி உயரத்தில் அதன் இன்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. இதையடுத்து விமானத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டடு அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் VT-AYC இயக்க விமானம் IX 348 (அபுதாபி-கோழிக்கோடு) நடுவானில் 1000 அடியில் காற்ரின் திசை மாறுபாடு காரணமாக இன்ஜின் எண் 1-ல் வெடிப்பு ஏற்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து