முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      சினிமா
Thangaraj 2023 02 03

Source: provided

சென்னை : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.  மக்கள் கலைஞரான தங்கராஜ்,  பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். 

அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து